ஆட்டோமொபைல்
ஹூரோ மோட்டோகார்ப்

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டை உறுதிப்படுத்திய ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரி

Published On 2021-09-24 09:16 GMT   |   Update On 2021-09-24 09:16 GMT
ஹீரோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாற்றக்கூடிய பேட்டரிகளை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகமாகும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மூத்த நிதி அலுவலர் நிரஞ்சன் குப்தா தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகைப்படத்துடன் நிற்கும் படத்தை ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சல் வெளியிட்டார். புகைப்படத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பது போன்றே காட்சியளித்தது.



எனினும், இந்த ஸ்கூட்டர் பற்றிய விவரங்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிடவில்லை. தனது எலெக்ட்ரிக் பிரிவுக்கு ஹீரோ மோட்டோகார்ப் புதிய பெயரை சூட்ட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஹீரோவின் இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கோகோரோ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. 

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மார்ச் 2022 வாக்கில் அறிமுகமாகும் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மாற்றக்கூடிய பேட்டரிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News