ஆட்டோமொபைல்
ஓலா எலெக்ட்ரிக்

எலெக்ட்ரிக் கார் வெளியிடும் ஓலா

Published On 2021-09-23 14:42 IST   |   Update On 2021-09-23 14:42:00 IST
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எதிர்கால திட்டம் பற்றி அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி பதிவிட்டுள்ளார்.


ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இரண்டே நாட்களில் ரூ. 1100 கோடி மதிப்பிலான யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

'இது வெறும் துவக்கம் தான், எலெக்ட்ரிக் பைக் மற்றும் எலெக்ட்ரிக் கார் பிரிவில் களமிறங்க திட்டமிட்டுள்ளோம். வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்த இருக்கிறோம்,' என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.



ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான டெஸ்ட் ரைடு அக்டோபர் மாதத்திலும் ஆன்லைன் விற்பனை தளம் நவம்பர் 1 ஆம் தேதியும் துவங்க இருக்கிறது. தற்போது இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

Similar News