ஆட்டோமொபைல்
ஓலா எஸ்1

முதல் நாளில் ரூ. 600 கோடி - விற்பனையில் அசத்தும் ஓலா எலெக்ட்ரிக்

Published On 2021-09-16 08:59 GMT   |   Update On 2021-09-16 08:59 GMT
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் நாள் விற்பனை விவரங்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.


ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையை நேற்று துவங்கியது. விற்பனையின் முதல் நாளில் மட்டும் ரூ. 600 கோடி மதிப்பிலான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

விற்பனை துவங்கியது முதல் ஒவ்வொரு நொடிக்கும் 4 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். விரைவில் அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்து போகலாம் என அவர் மேலும் தெரிவித்தார். 



இந்தியாவில் ஓலா எஸ்1 மாடலின் விலை ரூ. 1 லட்சம் என்றும் எஸ்1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1.30 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. மேலும் இவை ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபடும்.
Tags:    

Similar News