ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி சியாஸ்

விற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி சுசுகி சியாஸ்

Published On 2021-09-11 11:17 GMT   |   Update On 2021-09-11 11:17 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் இந்திய சந்தையில் 2014 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


மாருதி சுசுகி நிறுவனம் தனது பிரீமியம் செடான் மாடலான சியாஸ் இந்திய விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக தெரிவித்து உள்ளது. இந்திய சந்தையில் இதுவரை 3 லட்சம் சியாஸ் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது. 

இந்தியாவில் செடான் மாடல்கள் விற்பனை சரிந்து வரும் நிலையில், அதிவேகமாக இத்தகைய மைல்கல் எட்டிய கார் என்ற பெருமையை சியாஸ் பெற்று இருக்கிறது. பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் சியாஸ் மாடலின் விலை ரூ. 8.60 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.59 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



'பிராண்டின் மீது மக்கள் வைத்து இருக்கும் வலுவான நம்பிக்கையை எடுத்துக் காட்டும் வகையில் 3 லட்சம் யூனிட்கள் விற்பனை அமைந்துள்ளது,' என மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக இயக்குனர் சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். 

Tags:    

Similar News