ஆட்டோமொபைல்
போர்டு கார்

இந்தியாவில் உற்பத்தியை நிறுத்திய போர்டு

Published On 2021-09-11 04:06 GMT   |   Update On 2021-09-11 04:06 GMT
போர்டு மோட்டார் கோ நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை முழுமையாக நிறுத்துகிறது.


போர்டு மோட்டார் கோ நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது. இதன் காரணமாக இந்தியாவில் செயல்பட்டு வரும் இரண்டு போர்டு உற்பத்தி ஆலைகள் மூடப்பட இருக்கின்றன. போர்டு நிறுவனத்துக்கு இந்தியாவில் சென்னையை அடுத்த மறைமலைநகர், குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாவட்டத்தில் உள்ள சானந்த் ஆகிய இடங்களில் தொழிற்சாலை உள்ளது.

இந்தியாவில் வாகன உற்பத்திக்காக போர்டு நிறுவனம் சுமார் ரூ.250 கோடி முதலீடு செய்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விற்பனை பாதிப்பு, தொடர் நஷ்டம் காரணமாக இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதாக போர்டு நிறுவனம் திடீரென அறிவித்துள்ளது.



தொழிற்சாலைகள் மூடப்பட்டாலும் விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும், வாகன இயக்கங்களுக்கான வாடிக்கையாளர்களுக்கு முழுமையான உதவிகள் வழங்கப்படும் என்றும் போர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. போர்டு நிறுவனத்துக்கு நஷ்டம் மட்டும் ரூ.200 கோடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹார்லி டேவிட்சன் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தனது வாகனங்கள் உற்பத்தியை நிறுத்தின. அந்த வரிசையில் தற்போது போர்டு நிறுவனமும் இணைந்துள்ளது.

Tags:    

Similar News