ஆட்டோமொபைல்
கோப்புப்படம்

அதிக மைலேஜ் கொடுக்கும் புது சாதனம் உருவாக்கிய ஐதராபாத் வாலிபர்

Published On 2021-07-06 15:31 IST   |   Update On 2021-07-06 15:31:00 IST
வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசு அளவை குறைக்கும் மைலேஜ் பூஸ்டர் சாதனத்தை தொழில்நுட்ப வல்லுநர் உருவாக்கி இருக்கிறார்.

காற்று மாசை குறைக்கும் நோக்கில், ஐதராபாத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாகனங்களின் மைலேஜை அதிகப்படுத்தும் திறன் கொண்ட மைலேஜ் பூஸ்டரை உருவாக்கி உள்ளார். 

மூத்த தொழில்நுட்ப வல்லுநர் டேவிட் எஷ்கால் 5M மைலேஜ் பூஸ்ட் சாதனத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த சாதனம் வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசு அளவை வெகுவாக குறைக்கிறது. மேலும் இது வாகனங்களின் பிக்கப், டார்க் மற்றும் திரஸ்ட் அளவை அதிகப்படுத்தி காற்று மாசு ஏற்படுவதை குறைக்கிறது. இத்துடன் எரிபொருளை சேமிக்கவும் வழி செய்கிறது.



மைலேஜ் பூஸ்டரின் ஐந்து பலன்களை குறைக்கும் வகையில் இந்த சாதனத்திற்கு 5M என பெயர் சூட்டப்பட்டுள்ளது. என்ஜினை திறக்காமலேயே அதன் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த மைலேஜ் பூஸ்டர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்து அல்ட்ராசோனிக் கதிர்கள் மற்றும் வாயு அடங்கிய பிளாஸ்மா என்ஜினுள் செலுத்தப்படுகிறது.

'மைலேஜ் பூஸ்டரை உருவாக்கும் பணிகளை 2008 ஆம் ஆண்டு துவங்கினேன். இது வாகனத்தின் மைலேஜை அதிகப்படுத்துவது மட்டுமின்றி சுற்றுச்சூழலில் ஏற்படும் காற்று மாசு அளவையும் குறைக்கும்,' என எஷ்கோல் தெரிவித்தார். இது இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்து மற்றும் டிரக் போன்றவைகளிலும் பயன்படுத்த முடியும். 100 சிசி முதல் 10 ஆயிரம் சிசி திறன் கொண்ட என்ஜின்களில் இந்த மைலேத் பூஸ்டரை பயன்படுத்தலாம். 

Similar News