ஆட்டோமொபைல்
வால்வோ கார்

இந்தியாவில் சந்தா முறையை அறிமுகம் செய்த வால்வோ

Published On 2021-06-24 09:43 GMT   |   Update On 2021-06-25 16:30 GMT
வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் நாட்டின் இரு நகரங்களில் சந்தா முறையை அறிமுகம் செய்துள்ளது.

வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் கார் சந்தா முறையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த சந்தா முறை சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டு இருக்கிறது. இன்னும் இந்த திட்டம் நாடுமுழுக்க அறிமுகம் செய்யப்படவில்லை. 



வால்வோ இந்தியாவின் புதிய கார் சந்தா முறை டெல்லி மற்றும் குர்கிராமில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சந்தா முறை குறைந்தபட்சம் 12 மாதங்களில் இருந்து துவங்குகிறது. புது திட்டம் Subscribe to Safety பெயரில் கிடைக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் பல்வேறு வால்வோ கார்களை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்தில் வால்வோ எஸ்90 செடான் மாடல் மட்டும் இடம்பெறவில்லை.

புதிய சந்தா முறையில் வாடிக்கையாளர்கள் முதற்கட்டமாக சிறு தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். மாதாந்திர சந்தா கட்டணம் பராமரிப்பு, இன்சூரன்ஸ், பதிவு மற்றும் சாலை வரி உள்ளிட்டவைகளுக்கும் சேர்த்தே வசூலிக்கப்படுகிறது.
Tags:    

Similar News