ஆட்டோமொபைல்
வீடியோ ஸ்கிரீன்ஷாட்

பந்தயகளத்தில் நூலிழையில் உயிர்தப்பிய அணில்

Published On 2021-06-16 14:59 IST   |   Update On 2021-06-16 14:59:00 IST
பந்தய களத்தில் வேகமாக வந்த காரின் முன் குறுக்கிட்ட அணில் வீடியோ ட்விட்டரில் வெளியாகி இருக்கிறது.


கார் பந்தய களத்தில் விபத்து நடைபெறுவது சகஜம். பல்வேறு விபத்துகளில் ஓட்டுனர்கள் உயிர் தப்பும் சம்பவங்கள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஆனால் தற்போது பந்தய களத்திற்கு துளியும் சம்மந்தமில்லாத அணில் ஒன்று விபத்தில் சிக்காமல் உயிர்தப்பிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.


டெட்ராயிட் கிராண்ட் ப்ரிக்ஸ் கார் பந்தய களத்தில், ரியான் ஹன்டர் லீவி காரின் முன் அணில் ஒன்று வேகமாக குறுக்கிட்டது. வேகமாக வந்த கார் அணில் மீது மோதிவிடுமோ என்ற வகையில் வீடியோ காட்சிகள் இடம்பெற்று இருந்தன. எனினும், அணில் மீது கார் மோதவில்லை. 

பந்தய களத்தில் குறுக்கிட்ட அணில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது. காரில் சிக்காமல் இருக்க வேகமாக தாவி குதித்த அணில் அருகில் இருந்த சுவர் ஓட்டையில் நுழைந்து தப்பி சென்றது. இந்த சம்பவத்தின் வீடியோ ட்விட்டர் தளத்தில் வெளியாகி இருக்கிறது. காரை வேகமாக ஓட்டிவந்த பந்தய வீரர் அணிலை பார்த்தாரா என உறுதியாக தெரியவில்லை. 

Similar News