ஆட்டோமொபைல்
ரிமேக் நிவெரா

ரிமேக் நிவெரா எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் உற்பத்தி துவக்கம்

Published On 2021-06-04 09:16 GMT   |   Update On 2021-06-04 09:16 GMT
1888 பிஹெச்பி பவர் கொண்ட ரிமேக் நிவெரா எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் உற்பத்தி துவங்கியது.

ரிமேக் நிவெரா எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடலின் உற்பத்தி துவங்கியுள்ளது. ரிமேக் நிவெரா மாடல் 1888 பிஹெச்பி பவர், 2360 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த காரில் நான்கு எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் காரின் நான்கு சக்கரங்களுக்கு தனித்தனியாக திறன் வழங்குகின்றன.



பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களை போன்று இல்லாமல், இந்த காரில் உள்ள மோட்டார்கள் வித்தியாசமாக இருக்கின்றன. முன்புற சக்கரங்களில் உள்ள மோட்டார்கள் 670 பிஹெச்பி பவர், 560 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பின்புற மோட்டார்கள் 1206 பிஹெச்பி பவர், 1800 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

முற்றிலும் வித்தியாசமான பவர்டிரெயின் ரிமேக் நிவெரா மாடலை ரியர்-வீல் டிரைவ் வாகனத்தை இயக்குவது போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 1.97 நொடிகளில் எட்டிவிடும். இது மணிக்கு 412 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது.  
Tags:    

Similar News