ஆட்டோமொபைல்
சுங்க சாவடி

சுங்க சாவடிகளில் வரிசை நீண்டால் பணம் வேண்டாம் - தேசிய நெடுஞ்சாலை துறை அதிரடி

Published On 2021-05-27 09:35 GMT   |   Update On 2021-05-27 09:35 GMT
நாடு முழுக்க அனைத்து சுங்க சாவடிகளிலும் வாகனங்கள் மஞ்சள் கோடில் இருந்தால் பணம் செலுத்த வேண்டாம்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுக்க செயல்பட்டு வரும் சுங்க சாவடிகளுக்கு புது விதிமுறைகளை பிறப்பித்து இருக்கிறது. புது விதிமுறைகள் சுங்க சாவடிகளில் மக்கள் காதிருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புது விதிமுறைகளின் படி, சுங்க சாவடிகளில் வாகன வரிசை 100 மீட்டர்களுக்கும் அதிகமாக நிற்காது. மேலும் சுங்க சாவடிகளில் ஒரு வாகனத்திற்கு அதிகபட்சம் பத்து நொடிகளுக்குள் பணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.



ஒருவேளை சுங்க சாவடியில் வாகன வரிசை 100 மீட்டர்களை கடந்து இருந்தால், வாகனங்கள் கட்டணமின்றி சுங்க சாவடியை கடக்க முடியும். இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சரியாக 100 மீட்டர் பகுதியில் மஞ்சள் நிற கோடி வரையப்பட இருக்கிறது.

சுங்க சாவடிகளில் பாஸ் டேக் முறை பின்பற்றப்படுவதால், இங்கு வாகனங்கள் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைந்து இருக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகன உரிமையாளர்கள் எரிபொருள் சேமிக்க முடியும். தற்போது  சதவீத சுங்க சாவடிகளில் பாஸ்டேக் முறை பின்பற்றப்படுகிறது.
Tags:    

Similar News