ஆட்டோமொபைல்
தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கிய ஹூண்டாய்
தமிழகத்தில் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களை ஹூண்டாய் பவுன்டேஷன் நிதி வழங்கியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் சார்பில் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழ் மாநில அரசாங்கத்திற்கு ரூ. 10 கோடி வழங்கப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்றை எதிர்க்கும் நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நிவாரண உதவி தொகையில் ரூ. 5 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இந்த தொகை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ. 5 கோடி கொண்டு பிபிஐ கிட் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட இருக்கின்றன.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையின் போதும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பிலான நிவாரண உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.