ஆட்டோமொபைல்
மஹிந்திரா

ஆக்சிஜன் விநியோக திட்டத்தை சென்னைக்கும் நீட்டித்த மஹிந்திரா

Published On 2021-05-18 09:45 GMT   |   Update On 2021-05-18 09:45 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் ஆக்சிஜன் ஆன் வீல்ஸ் திட்டத்தின் மூலம் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்யப்படுகிறது.

மஹிந்திரா நிறுவனம் இம்மாத துவக்கத்தில் ஆக்சிஜன் ஆன் வீல்ஸ் (O2W) திட்டத்தை ஏழு நகரங்களில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த திட்டம் சென்னை நகருக்கும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மஹிந்திரா நிறுவனம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனை மற்றும் இதர மருத்துவ நிறுவனங்களுக்கு சென்றடைய உதவுகிறது.

தற்போது 100-க்கும் அதிகமான மஹிந்திரா வாகனங்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை மும்பை, பூனே, நாஷிக், நாக்பூர், ஐதராபாத், பஞ்சாப் மற்றும் டெல்லி-என்சிஆர் போன்ற நகரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. மஹிந்திரா பொலிரோ பிக்கப் டிர்க் வாகனங்கள் இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. 



இதுவரை சுமார் 1000-க்கும் அதிக ட்ரிப்களின் மூலம் 23 ஆயிரம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன. O2W சேவைகளை பெற பயனர்கள் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் குழுவை தொடர்பு கொள்ள வேண்டும். இதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

முன்னதாக மஹிந்திரா தனது வாகனங்களுக்கான வாரண்டி சலுகை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. இத்துடன் மே மாதத்திற்கான சலுகை மற்றும் தள்ளுபடியை மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News