ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் W123

ஏலத்திற்கு வந்த 12.6 லட்சம் கிலோமீட்டர்கள் ஓடிய பென்ஸ் கார்

Published On 2021-05-17 09:50 GMT   |   Update On 2021-05-17 09:50 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 42 ஆண்டுகள் பழைய கார் மாடல் ஏல விற்பனைக்கு வந்தடைந்து இருக்கிறது.


மெர்சிடிஸ் பென்ஸ் W123 மாடல் அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த மாடல் 12.6 லட்சம் கிலோமீட்டர்கள் ஓடியிருக்கிறது. எனினும், இந்த கார் எவ்வித பிரச்சினையும் இன்றி சீராக இயங்குகிறது. இது 42 ஆண்டுகள் பழைய மாடல் ஆகும்.



மெர்சிடிஸ் W123 உலகின் தலைசிறந்த மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. 42 ஆண்டுகள் பழைய மாடல் என்பதால், இது 12,58,507 கிலோமீட்டர்கள் ஓடியிருக்கிறது. தோற்றத்தில் இந்த மாடல் ஷோரூமில் காட்சிக்கு வைக்கப்படும் கார் போன்றே காட்சியளிக்கிறது. 

1979 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் மாடலில் செல்ப்-லெவலிங் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே சரி செய்யப்பட்டது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், சிடி பிளேயர், எலெக்ட்ரிக் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், சன்ரூப், குரூயிஸ் கண்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News