ஆட்டோமொபைல்
வால்வோ கார்

கார் மாடல்கள் விலையை உயர்த்திய வால்வோ இந்தியா

Published On 2021-05-05 09:02 GMT   |   Update On 2021-05-05 09:02 GMT
2018 ஆம் ஆண்டில் இருந்து முதல் முறையாக வால்வோ இந்தியா தனது கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.


வால்வோ கார் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வில் S90, XC40, XC60 மற்றும் XC90 போன்ற மாடல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாடல்களுக்கான விலை உயர்வு மே 3 ஆம் தேதி முதல் அமலாகிறது. 

உற்பத்திக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பது, கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவது போன்ற காரணங்களால் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 2018 முதல் வாகனங்கள் விலையை வால்வோ உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.



வால்வோ கார்கள் புது விலை விவரம்

- வால்வோ S90 D4 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 60,90,000
- வால்வோ XC40 T4 R டிசைன் ரூ. 41,25,000
- வால்வோ XC60 D5 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 60,90,000
- வால்வோ XC90 D5 இன்ஸ்க்ரிப்ஷன் ரூ. 88,90,000

வால்வோ சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய S60 செடான் மாடல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ. 45.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆக இருக்கிறது.
Tags:    

Similar News