ஆட்டோமொபைல்
எம்ஜி கார்

உற்பத்தி பணிகளை தற்காலிகமாக நிறுத்திய எம்ஜி மோட்டார்

Published On 2021-04-28 11:06 GMT   |   Update On 2021-04-28 11:06 GMT
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி எம்ஜி மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்து இருக்கிறது. நாடு முழுக்க கொரோனா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புது அறிவிப்பை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் எம்ஜி மோட்டார் ஆலை ஏப்ரல் 29 துவங்கி மே 5 வரை மூடப்படுகிறது.



கொடிய வைரசிடம் இருந்து தனது ஊழியர்களை காப்பாற்றும் நோக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதுதவிர தேவ்நந்தன் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜன் வினியோகத்தை அதிகப்படுத்த இருப்பதாக எம்ஜி மோட்டார் தெரிவித்து உள்ளது.

முன்னதாக எம்ஜி கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களை அதனை டெலிவரி பெற இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என எம்ஜி மோட்டார் தெரிவித்தது.
Tags:    

Similar News