ஆட்டோமொபைல்
ஹோண்டா கார்

கோளாறு காரணமாக கார்களை ரீகால் செய்யும் ஹோண்டா

Published On 2021-04-17 11:07 GMT   |   Update On 2021-04-17 11:07 GMT
ஹோண்டா நிறுவன கார்களின் பியூவல் பம்ப் கோளாறு கண்டறியப்பட்டதை தொடர்ந்து கார்களை ரீகால் செய்யும் பணி நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.


ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது கார்களை ரீகால் செய்வதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இதுவரை 77 ஆயிரம் யூனிட்களை ஹோண்டா ரீகால் செய்து இருக்கிறது. பியூவல் பம்ப் பாகத்தில் கோளாறு கண்டறியப்பட்டதே கார்கள் ரீகால் செய்வதற்கான காரணம் ஆகும்.



இந்த பிரச்சினையில் அமேஸ், 4-ம் தலைமுறை சிட்டி, டபிள்யூஆர்-வி, ஜாஸ், சிவிக், பிஆர்-வி மற்றும் சிஆர்-வி போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. மாடலை பொருத்து ஜனவரி 2019 முதல் செப்டம்பர் 2019 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன.

கார்களின் பியூவல் பம்ப் கோளாறு நாளடைவில் என்ஜினுக்கு தேவையான எரிபொருள் வினியோகத்தை தடைப்படுத்தலாம். இதன் காரணமாக வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் போக வாய்ப்புகள் உண்டு. இதுதவிர கம்பஷன் வழிமுறை சார்ந்த மற்ற பாகங்களையும் இது சேதப்படுத்தும்.
Tags:    

Similar News