ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் கார்

சர்வதேச விற்பனையில் 22.3 சதவீத வளர்ச்சி பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ்

Published On 2021-04-12 08:32 GMT   |   Update On 2021-04-12 08:32 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2021 முதல் காலாண்டிற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.


மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் 2021 முதல் காலாண்டில் மட்டும் 5,90,999 கார்களை விற்பனை செய்து இருக்கிறது. சீனா மற்றும் அமெரிக்க சந்தைகளில் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பென்ஸ் நிறுவனம் வாகன விற்பனையில் 22.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.



ஐரோப்பியாவில் விற்பனையான நான்கு பென்ஸ் மாடல்களில் ஒன்று xEV மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் ஒட்டுமொத்த விற்பனையில் பத்து சதவீதம் இடம்பிடித்துள்ளன. பென்ஸ் நிறுவனத்தின் EQA மாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 20 ஆயிரம் முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. இதுதவிர மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQS, EQB மற்றும் EQE என மூன்று புது மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
Tags:    

Similar News