ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி பலேனோ

விற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி கார்

Published On 2021-04-09 09:53 GMT   |   Update On 2021-04-09 09:53 GMT
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிவேகமாக விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் இந்திய விற்பனையில் 9 லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. இந்திய சந்தையில் இந்த மாடல் 2015 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

மேலும் இது மாருதி சுசுகி நெக்சா எக்ஸ்பீரியன்ஸ் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாவது மாடல் ஆகும். இந்திய சந்தையில் 9 லட்சம் யூனிட்கள் விற்பனையை அதிவேகமாக கடந்த நான்கு சக்கர வாகனம் பலேனோ என மாருதி சுசுகி தெரிவித்து இருக்கிறது.



இந்தியாவில் அறிமுகமான ஒரே ஆண்டிற்குள் இந்த மாடல் ஒரு லட்சம் யூனிட்களை கடந்தது. பின் மற்றொரு ஆண்டிற்குள் 2 லட்சம் யூனிட்கள் விற்பனையானது. 2018 ஆண்டு பலேனோ மாடல் 5 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. 2019 ஆண்டு இந்த எண்ணிக்கை 7 லட்சமாக உயர்ந்தது. 

அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் அதிவேகமாக விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக பலேனோ இருக்கிறது. பலேனோ ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Tags:    

Similar News