ஆட்டோமொபைல்
சுசுகி ஹயபுசா

புதிய சுசுகி ஹயபுசா இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-04-05 08:38 GMT   |   Update On 2021-04-05 08:38 GMT
சுசுகி நிறுவனத்தின் புதிய ஹயபுசா மாடல் இந்த மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


2021 சுசுகி ஹயபுசா மாடல் இந்திய சந்தையில் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா டீசர் ஒன்றை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு உள்ளது. புதிய ஹயபுசா மாடலின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாடல்களில் ஒன்றாக 2021 சுசுகி ஹயபுசா இருக்கிறது. 1999 ஆண்டு உலகின் அதிவேகமாக செல்லும் மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை ஹயபுசா பெற்றது. இந்த மாடல் மணிக்கு 312 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருந்தது.

2008 ஆம் ஆண்டு வரை உலகின் அதிவேக மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை ஹயபுசா தக்கவைத்து கொண்டிருந்தது. அதிவேக மோட்டார்சைக்கிள் எனும் போது அனைவரின் மனதில் எழும் முதல் மாடலாக ஹயபுசா இருக்கிறது. தற்போது இந்த மோட்டார்சைக்கிள் புது அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு உள்ளது.



2021 ஹயபுசா மாடலில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு முழுமையான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை 2021 ஹயபுசா மாடலில் டூ-டோன் நிறங்கள், எல்இடி ஹெட்லைட், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்ப்லிட் ஸ்டைல் சேடில், ட்வின்-சைடு எக்சாஸ்ட் உள்ளது.

இந்த மாடல் யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையிலான 1340சிசி, இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 187.7 பிஹெச்பி பவர், 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

இத்துடன் ரைடு-பை-வயர் எலெக்டிரானிக் திராட்டிள் சிஸ்டம், ரிவைஸ்டு இன்டேக் மற்றும் எக்சாஸ்ட் மெக்கானிசம் கொண்டுள்ளது. இந்த சூப்பர்பைக் லிட்டருக்கு 14.9 கிலோமீட்டர் வரை செல்லும் என சுசுகி தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News