ஆட்டோமொபைல்
டொயோட்டா

டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் டீசர் வெளியீடு

Published On 2021-03-12 10:50 GMT   |   Update On 2021-03-12 10:50 GMT
டொயோட்டா நிறுவனம் எக்ஸ் ப்ரோலாக் எலெக்ட்ரிக் கார் டீசரை வெளியிட்டு இருக்கிறது.


உலகின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய எலெக்ட்ரிக் கார் எக்ஸ் ப்ரோலாக் எனும் பெயர் கொண்டுள்ளது. இந்த கார் மார்ச் 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



தற்போதைய தகவல்களில் புதிய எக்ஸ் ப்ரோலாக் மாடல் e-TNGA பிளாட்பார்மில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பிளாட்பார்ம் பிரண்ட்-வீல் டிரைவ், ரியர்-வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதியை வழங்கும். மேலும் இதை கொண்டு பெரிய அளவில் கிராஸ்ஒவர், மினிவேன் மற்றும் செடான் உள்ளிட்டவைகளை வடிவமைக்க முடியும். இவை அனைத்தும் புதிய பெயர் கொண்டிருக்கும்.

டீசரின்படி எக்ஸ் ப்ரோலாக் மாடலில் சி வடிவ எல்இடி லைட் வழங்கப்படும் என தெரிகிறது. இதுதவிர இந்த கார் அதிநவீன தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் உருவாகும் e-TNGA பிளாட்பார்ம் பல்வேறு அளவு கொண்ட பேட்டரிகள் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் அவுட்-புட்களை கையாளும் திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News