ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் கார்

பயணிகள் வாகன உற்பத்தியில் புது மைல்கல் கடந்த மெர்சிடிஸ் பென்ஸ்

Published On 2021-02-16 11:04 GMT   |   Update On 2021-02-16 11:04 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன உற்பத்தியில் புது மைல்கல் கடந்து உள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.


மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சர்வதேச வாகன உற்பத்தியில் ஐந்து கோடி யூனிட்களை கடந்துள்ளது. மெர்சிடிஸ் மேபக் எஸ் கிளாஸ் மாடல் ஐந்து கோடி யூனிட்டாக உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த மைல்கல் எட்ட 75 ஆண்டுகள் ஆனது என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து உள்ளது. தற்சமயம் மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. 2022 ஆண்டு வாக்கில் ஆறு புதிய இகியூ மாடல்களை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டு உள்ளது.

ஒரே ஆலையில் ஐசிஇ மாடல்கள் மற்றும் இகியூ மாடல்கள் என இரண்டையும் உற்பத்தி செய்யும் வகையிலான வசதியை கொண்டுள்ளன. 



புது மைல்கல் எட்டியது குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ஜார்க் பர்சர் கூறும் போது..,

“மெர்சிடிஸ் பென்ஸ் என்றாலே ஆடம்பரம் தான். இதன் காரணமாகவே இந்த மைல்கல் எட்டியதில் பெரு மகிழ்ச்சியாக உள்ளது. ஐந்து கோடி யூனிட்களை உற்பத்தி செய்தது எங்களது நிறுவனத்திற்கு மிக பெரிய மைல்கல் ஆகும். தொடர் ஈடுபாடு மற்றும் சிறப்பான பணியை செய்து வரும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.” 

“வாகன உற்பத்தியில் இவர்களின் அசாத்திய அனுபவம் மற்றும் சிறப்பான பங்களிப்பு மட்டுமே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய வாடிக்கையாளர்கள் கனவை நனவாக்கி வருகிறது. என தெரிவித்தார்.”
Tags:    

Similar News