ஆட்டோமொபைல்
எம்ஜி மோட்டார்

இணையத்தில் வெளியான எம்ஜி மோட்டார் புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள்

Published On 2021-02-13 16:17 IST   |   Update On 2021-02-13 16:17:00 IST
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் 2021 இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து மற்றொரு புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டமிட்டு வருகிறது. 

இதுபற்றிய விவரங்களை எம்ஜி மோட்டார் இந்தியா மூத்த நிர்வாக அதிகாரியான கௌரவ் குப்தா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். புதிய மாடலுக்கென எம்ஜி மோட்டார் நிறுவனம் பெரிய பேட்டரியை பயன்படுத்த இருப்பதாகவும், இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.



எனினும், எம்ஜி இசட்எஸ் மாடலில் வழங்கப்பட்ட பேட்டரியை புதிய மாடலிலும் வழங்கப்படுமா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. புதிய பேட்டரியை தேர்வு செய்யும் போது இதுபற்றிய முடிவு எட்டப்பட இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய எம்ஜி இசட்எஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 1300 யூனிட்களை எம்ஜி மோட்டார் இந்தியா விற்பனை செய்து உள்ளது. இதன் வெற்றியை தொடர்ந்தே எம்ஜி மோட்டார் மற்றொரு எலெக்ட்ரிக் கார் மாடலை நீண்ட தூரம் செல்லும் வகையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

Similar News