ஆட்டோமொபைல்
சார்ஜாவில் தொடங்கிய பழங்கால கார் கண்காட்சி
சார்ஜா கோர்பக்கான் பகுதியில் அபூர்வமான பழங்கால கார் கண்காட்சி தொடங்கியது. இதன் விவரங்ளை பார்ப்போம்.
சார்ஜாவில் பழமையான கார்களை சேகரிப்பவர்களை ஒன்றிணைத்து பல்வேறு ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கு திட்டங்களை செயல்படுத்துவதற்காக கடந்த 2008-ம் ஆண்டில் சார்ஜா பழமையான கார்கள் மன்றம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த மன்றத்தை சார்ஜா ஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி திறந்து வைத்தார்.
இதன் மூலம் பழமையான கார்களின் கண்காட்சி, கருத்தரங்கம், விளையாட்டு போட்டிகள் என பல்வேறு செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சார்ஜா முதலீடு மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் ஆதரவில் இந்த மன்றம் செயல்பட்டு வருகிறது.
அமீரகத்தின் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டங்களின் ஒரு பகுதியாக தற்போது பழங்கால கார்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி மாதத்திற்கு ஒருநாள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 நாட்கள் வெள்ளிக்கிழமை அன்று இந்த பழமையான கார்கள் கண்காட்சி சார்வில் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
அதன் படி முதலாவது நாளாக நேற்று கோர்பக்கான் கடற்கரை பகுதி அருகே இந்த பழங்கால கார்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் தற்போது புழக்கத்தில் இல்லாத 50 பழங்கால கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. குறிப்பாக கடந்த 1923-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட கார்கள் இதில் இடம்பெற்று பார்வையாளர்களை கவர்ந்தது.
இதற்கு அடுத்தபடியாக வருகிற 19-ந் தேதி, மார்ச் 26-ந் தேதி மற்றும் ஏப்ரல் 2 ஆம் தேதி ஆகிய நாட்களில் இந்த பழங்கால கார் கண்காட்சி நடைபெற உள்ளது.
இறுதி–யாக நடைபெறும் கண்–காட்சியானது கொடி தீவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கார் கண்காட்சி நடைபெறும் வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள், உணவகங்கள் உள்ளிட்டவைகள் பார்வையாளர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.