ஆட்டோமொபைல்
சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட்

தொடர் சோதனையில் சுசுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Published On 2021-01-19 11:36 GMT   |   Update On 2021-01-19 11:36 GMT
சுசுகி நிறுவனத்தின் பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. இது பர்க்மேன் ஸ்டிரீட் மாடலை தழுவி உருவாகி வருகிறது. முன்னதாக பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

தற்சமயம் வெளியாகி இருக்கும் ஸ்பை படங்கள் டெல்லி சாலையில் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இம்முறை பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மறைக்கப்படவில்லை. இந்த மாடலில் ஐசி-என்ஜின் கொண்டு இயங்குகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டூயல் டோன் நிறத்தில் கிடைக்கிறது.



இந்த ஸ்கூட்டரின் கீழ்புறம், முன்புற ஹேண்டில்பார் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் புளூ ஹைலைட்கள் செய்யப்பட்டு உள்ளன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் இந்த மாடலின் எக்சாஸ்ட் பைப் நீக்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர இந்த ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இத்துடன் வித்தியாசமான அலாய் வீல், டியூப்லெஸ் டையர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News