ஆட்டோமொபைல்
டெஸ்லா எலெக்ட்ரிக் கார்

பெங்களூரில் உருவாகும் டெஸ்லா ஆய்வு மையம்

Published On 2021-01-14 04:15 GMT   |   Update On 2021-01-13 11:36 GMT
அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளரான டெஸ்லா பெங்களூரில் தனது ஆய்வு மையத்தை கட்டமைக்க இருக்கிறது.


அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் தனது பணிகளை துவங்க இருக்கிறது. முன்னதாக இதே தகவலை டெஸ்லா நிறுவனர் மற்றும் மத்திய அமைச்சர் உறுதிப்படுத்தி இருந்தனர்.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஆய்வு மையத்தை பெங்களூரு நகரில் துவங்க இருக்கிறது. இதற்கான அரசு ஆவணம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் மற்றும் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 



டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகையை கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது.., 

"இந்தியாவின் பசுமை போக்குவரத்து சார்ந்த பயணத்தை கர்நாடகா வழிநடத்தும். எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா விரைவில் தனது ஆய்வு மையத்தை பெங்களுரில் துவங்க இருக்கிறது. நான் எலான் மஸ்கை இந்தியாவுக்கும், கர்நாடக மாநிலத்திற்கும் வரவேற்று, வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்." 

என அவர் பதிவிட்டு இருக்கிறார்.

Tags:    

Similar News