பொங்கல் பண்டிகையையொட்டி யமஹா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.
வாகனங்களுக்கு சிறப்பு பண்டிகை சலுகைகளை அறிவித்த யமஹா
பதிவு: ஜனவரி 09, 2021 15:42
யமஹா மோட்டார்சைக்கிள்
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர்களில் யமஹா நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது. யமஹா நிறுவனத்துக்கு தமிழகம் ஒரு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது.
அதன் ஒட்டுமொத்த விற்பனையில் 23 சதவீத பங்களிப்பை தமிழகம் அளிக்கிறது. நிறுவனத்தின் புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களான 125 சிசி, 150 சிசி, 250 சிசி ஆகியவை வளர்ந்து வரும் சந்தை திறனை கொண்டதாக இருக்கிறது.
இதுதவிர மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் நிறுவனம் வழங்கும் கவர்ச்சிகரமான நிதித் திட்டங்களின் கீழ் அனைத்து மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் 5.99 சதவீதம் முதல் குறைந்த வட்டி விகிதத்தை பெறலாம்.
யமஹா பிஎஸ்6 மாடலின் தற்போதைய வரிசையில் 125 சிசி மாடலான பேசினோ 125 எப்ஐ, ரே இசட்ஆர் 125 எப்ஐ மற்றும் ரே இசட்ஆர் ஸ்டிரீட் ரேலி 125 எப்ஐ மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இத்துடன் 150 சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் ஆர்15 வெர்ஷன் 3.0 மற்றும் எம்டி-15, எப்இசட் எப்ஐ மற்றும் எப்இசட்எஸ் எப்ஐ வெர்ஷன் 3.0 மாடல்களும், 250 சிசி மாடல்களில் எப்இசட் 25 மற்றும் தி நியூ எப்இசட்எஸ் 25 மாடல்களும் இருக்கின்றன.
Related Tags :