ஆட்டோமொபைல்
கியா கார்னிவல்

அடுத்த ஆண்டு புதிய லோகோவை அறிமுகம் செய்யும் கியா மோட்டார்ஸ்

Published On 2020-10-31 09:48 GMT   |   Update On 2020-10-31 09:48 GMT
கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் புதிய லோகோவை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

சர்வதேச சந்தையில் கியா மோட்டார்ஸ் அதிக பிரபலமான நிறுவனம் ஆகும். தற்சமயம் இந்திய சந்தையிலும் இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது. 

தென் கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் சர்வதேச சந்தையில் புத்தம் புதிய லோகோவினை 2021 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிளாஸ் எஸ் எனும் திட்டத்தின் கீழ் பிராண்டை மறுகட்டமைப்பு செய்ய கியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



கியா மோட்டார்ஸ் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கியா திட்டமிடுவதாக கூறப்படுகிறது. 

2025 ஆண்டுக்குள் கியா மோட்டார்ஸ் 11 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இதற்கென கியா மோட்டார்ஸ் 2500 கோடி டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.
Tags:    

Similar News