ஆட்டோமொபைல்
டாடா கிராவிடாஸ்

சோதனையில் சிக்கிய டாடா கார்

Published On 2020-10-19 10:20 GMT   |   Update On 2020-10-19 10:20 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா கிராவிடாஸ் மாடல் கார் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.


டாடா கிராவிடாஸ் மாடல் புது ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய கிராவிடாஸ் மாடல் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய கிராவிடாஸ் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. புதிய ஸ்பை படங்களின் படி, டாடா கார் புதிய அலாய் வீல் டிசைன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் 9 ஸ்போக் கொண்ட அலாய் வீல் வழங்கப்படுகிறது. 



புதிய அலாய் வீல் 18 இன்ச் அளவு கொண்டிருக்கும் என்றும் இது எஸ்யுவிக்கு பிரீமியம் தோற்றம் வழங்கும் என்றும் தெரிகிறது. இதன் வடிவமைப்பு ரேன்ஜ் ரோவர் மாடல்களில் உள்ளதை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.   

இத்துடன் காரின் உள்புறம் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, மல்டி-பன்ஷன் ஸ்டீரிங் வீல் மற்றும் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

புதிய கிராவிடாஸ் மாடல் ஹேரியர் எஸ்யுவியின் எக்ஸ்டென்டெட் வெர்ஷன் ஆகும். எனினும், புதிய மாடல்  அளவில் பெரியதாக இருக்கிறது. காரின் புன்புற வடிவமைப்பு மாற்றப்பட்டு மூன்றாம் அடுக்கு இருக்கைகளில் அமர்வோருக்கு அதிக இடவசதி வழங்கும்படி மாற்றப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News