ஆட்டோமொபைல்
கிரான்-டூரிஸ்மோ வி4 என்ஜின்

அசத்தலான கிரான்-டூரிஸ்மோ வி4 என்ஜின் விவரங்கள் வெளியீடு

Published On 2020-10-17 10:38 GMT   |   Update On 2020-10-17 10:38 GMT
டுகாட்டி நிறுவனத்தின் அசத்தலான கிரான்-டூரிஸ்மோ வி4 என்ஜின் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.


டுகாட்டி நிறுவனம் புத்தம் புதிய வி4 கிரான்-டூரிஸ்மோ என்ஜினை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த என்ஜின் அடுத்த தலைமுறை மல்டிஸ்டிராடா அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட இருக்கிறது. இந்த மாடல் விரைவில் வெளியாக இருக்கிறது.

புதிய கிரான்-டூரிஸ்மோ வி4 தற்போதைய மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் டெஸ்மோசெடிகி ஸ்டிரேடேள் யூனிட் போன்ற லே-அவுட்டில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதனுள் இருக்கும் பாகங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. இது முன்பை விட அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டுள்ளது.



தற்போதைய மல்டிஸ்டிராடா அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் டுவின் சிலிண்டர் டெஸ்டாஸ்டிரெட்டா என்ஜின் கொண்டிருக்கிறது. எனினும், நான்காம் தலைமுறை மாடலில் புத்தம் புதிய வி4 என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

புதிய வி4 கிரான்-டூரிஸ்மோ என்ஜின் 168 பிஹெச்பி பவர், 125 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உள்ளது. அந்த வகையில் இந்திய சந்தையில் இது பிஎஸ்6 விதிகளை பூர்த்தி செய்யும். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News