ஆட்டோமொபைல்
ஏத்தர் க்ரிட் பாஸ்ட் சார்ஜிங் மையம்

11 நகரங்களில் சார்ஜிங் மையங்களை துவங்கிய ஏத்தர் எனர்ஜி

Published On 2020-10-14 11:26 GMT   |   Update On 2020-10-14 11:26 GMT
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவின் 11 நகரங்களில் புதிதாக சார்ஜிங் மையங்களை திறந்து இருப்பதாக அறிவித்து உள்ளது.


ஏத்தர் எனர்ஜி நிறுவனம் 9 புதிய சந்தைகளில் ஏத்தர் க்ரிட் பொது பாஸ்ட் சார்ஜிங் மையங்களை திறந்துள்ளது. தற்சமயம் 37 பாஸ்ட் சார்ஜிங் மையங்களை பெங்களூரு நகரிலும், சென்னையில் 13 பாஸ்ட் சார்ஜிங் மையங்களையும் திறந்து இருக்கிறது. 

புதிய சார்ஜிங் மையங்களை சேர்க்கும் பட்சத்தில் ஏத்தர் எனர்ஜி இந்தியா முழுக்க மொத்தம் 150 பாஸ்ட் சார்ஜிங் மையங்களை கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நிறுவனங்களில் முதன்மையான ஒன்றாக ஏத்தர் இருக்கிறது.



பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்வதோடு, இவற்றுக்கு தேவையான உள்கட்டமைப்புகளையும் ஏத்தர் எனர்ஜி தொடர்ந்து வழங்கி வருகிறது. ஏத்தர் க்ரிட் பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்குகளில் அனைத்து எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பயன்படுத்த முடியும். 

ஏத்தர் 450எக்ஸ் பயன்படுத்துவோர் தங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்து 15 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும்.
Tags:    

Similar News