ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி ஆல்டோ

விற்பனையில் ஆல்டோ கார் படைத்த புதிய சாதனை

Published On 2020-10-14 10:41 GMT   |   Update On 2020-10-14 10:41 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ மாடல் கார் விற்பனையில் புதிய சாதனை படைத்து இருக்கிறது.

மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் ஆல்டோ மாடல் கார் இந்திய சந்தையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. ஆல்டோ மாடல் கார் இந்தியாவில் 2000 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 20 ஆண்டு காலக்கட்டத்தில் ஆல்டோ மாடல் இதுவரை சுமார் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் மாருதி சுசூகி ஆல்டோ சமகாலத்துக்கு ஏற்றவாறு பல்வேறு மாற்றங்களையும், மேம்பாடுகளையும் சந்தித்ததுடன், வாடிக்கையாளர்களின் வளரும் தேவைகளை நிறைவு செய்வதற்கு புதிய அம்சங்களையும் இணைத்து உள்ளது.



ஆல்டோ வெற்றியின் ரகசியம் அதன் வித்தியாசமான கண்கவர் வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, சுகமான அம்சங்கள், அனைவருக்கும் ஏற்ற விலை ஆகியவையே ஆகும். 

தற்போதைய ஆல்டோ மாடலில் தொடுதிரை ஸ்மாட் பிளே இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், டியூயல் டோன் இண்டீரியர், டியூயல் ஏர்பேக் ஆகிய அம்சங்களை மாருதி சுசுகி வழங்கி இருக்கிறது.
Tags:    

Similar News