ஆட்டோமொபைல்
டெஸ்லா

டெஸ்லா இந்தியா வெளியீட்டு விவரம்

Published On 2020-10-06 11:27 GMT   |   Update On 2020-10-06 11:27 GMT
டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாளரான டெஸ்லா இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு வாக்கில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவுக்கு டெஸ்லா வேண்டும் என்பதை விவரிக்கும் தகவல் அடங்கிய டி ஷர்ட் புகைப்படங்களை ட்விட்டரில் எலான் மஸ்குடன் பகிரப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் அடுத்த ஆண்டு நிச்சயம் நடக்கும் என தெரிவித்தார்.



உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் உற்பத்தியாளராக டெஸ்லா விளங்குகிறது. இந்நிறுவனம் சில தலைசிறந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களை இதுவரை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.

இவை டெஸ்லா வாடிக்கையாளர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்குகிறது. டெஸ்லாவின் என்ட்ரி லெவல் மாடல் 3 எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.

Tags:    

Similar News