ஆட்டோமொபைல்
கோப்புப்படம்

கார்களில் அதிக சவுகரியத்தை வழங்கும் அம்சம்

Published On 2020-09-29 10:51 GMT   |   Update On 2020-09-29 10:51 GMT
கார்களில் அதிக சவுகரியம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் அம்சம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


கார்களில் பிரேக் சிஸ்டத்தில் ஏபிஎஸ் என்ற ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இந்த வசதி இல்லாத கார்கள் என 2 வகைகள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் கார்களின் நான்கு சக்கரங்களிலும் ஏபிஎஸ் சென்சார் பொருத்தப்படுகிறது. இது சக்கரத்தின் சுழற்சியை சமன் செய்து அதன் மூலம் பிரேக் பிடிக்கும் செயலை ஒருங்கிணைக்கிறது.

பொதுவாக காரை நிறுத்த வேண்டியிருந்தால் பிரேக் பெடலை அழுத்துவோம், காரும் நிற்கும். ஆனால் 100 கி.மீ. வேகத்தில் செல்லும்போது பிரேக்கை அழுத்தினால் கார் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லும். ஆனால் ஏ.பி.எஸ். உள்ள கார்களில் இவ்விதம் நிகழாது. 



ஏனெனில் நான்கு சக்கரங்களிலும் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் சக்கரங்களின் சுழற்சியை ஒரே சீராக மாற்றும். இதனால் அதிக வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தாலும் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லாது.

நான்கு சக்கரங்களும் ஒரே சுழற்சியில் சுற்றுகிறது என்றால் நான்கு சக்கரங்களில் உள்ள சென்சார்களும் பிரேக் பிடிக்கும் சிக்னலை அனுப்பும்போது ஏதாவது ஒரு சக்கரத்தில் சுழற்சி குறைவாக இருந்தால் ஏபிஎஸ் மாடுலேட்டர் மூலம் மற்ற மூன்று சக்கரங்களின் சுழற்சியும் சீரானதாக மாற்றி சமன் செய்யும். 

இதனால் பிரேக் பிடிக்கும்போது வாகனம் ஒரு பக்கமாக இழுத்துச் சென்று கவிழ்வது தடுக்கப்படும். ஏபிஎஸ் உள்ள கார்களில் அதிக வேகத்தில் செல்லும்போது பிரேக் பிடித்தாலும் கார் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லாமல் நேராகவே செல்லும். ஸ்டீரிங்கும் ஒரு பக்கமாக இழுத்துச் செல்லாது. மேலும் பயமின்றி காரை ஓட்டிச் செல்ல முடியும்.
Tags:    

Similar News