ஆட்டோமொபைல்
நானோ எலெக்ட்ரிக் காருடன் மாணவர்கள்

குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனம் தயாரித்த மாணவர்கள்

Published On 2020-06-18 10:08 GMT   |   Update On 2020-06-18 10:08 GMT
இந்தியாவை சேர்ந்த பொறியியல் மாணவர்கள் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி இருக்கின்றனர்.



உலகில் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக ஆட்டோமொபைல் உற்பத்தி செய்யும் நிறுவனங்ககள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மைசூரை சேர்ந்த வித்யவர்தகா பொறியியல் கல்லூரி மாணவர்கள் டாடா நானோவை தழுவிய குறைந்த விலை எலெக்ட்ரிக் காரை உருவாக்கி இருக்கின்றனர். புகிய எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி விலை புத்தம் புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலின் விலையை விட குறைவு ஆகும்.



புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்க ரூ. 41500 விலையில் டாடா நானோ காரை வாங்கி, அதில் எலெக்ட்ரிக் மோட்டார் யூனிட், பேட்டரிகள், கண்ட்ரோலர், அக்சஸரீக்கள் மற்றும் லேபர் கட்டணம் சேர்த்து ரூ. 96658 மட்டுமே செலவானதாக மாணவர்கள் தெரிவித்துள்ளர்.

அந்த வகையில் எலெக்ட்ரிக் கார் முழுமையாக உருவாக்க மொத்தத்தில் ரூ. 138158 மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இது கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் விலையை விட ரூ. 16 ஆயிரம் வரை குறைவு ஆகும்.

மாணவர்கள் உருவாக்கி இருக்கும் டாடா நானோ எலெக்ட்ரிக் காரில் ஒருவர் பயணிக்கும் போது ஒருமுறை சார்ஜ் செய்தால் 40 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். அதாதவது ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 1.15 மட்டுமே செலவாகும். இந்த காரில் நான்கு பேர் பயணிக்கும் போது, ஒரமுறை சார்ஜ் செய்தால் 35 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். இதற்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 1.32 மட்டும் தான்.
Tags:    

Similar News