ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிரெட்டா

வெளிநாட்டு சந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான யூனிட்களை உற்பத்தி செய்த ஹூண்டாய்

Published On 2020-05-30 11:22 GMT   |   Update On 2020-05-30 11:22 GMT
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய மே மாதம் உற்பத்தி செய்த கார்களின் எண்ணிக்கையை தெரிவித்துள்ளது.



ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மே மாதத்தில் மட்டும் சுமார் 5 ஆயிரம் வாகனங்களை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென உற்பத்தி செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது. மே 8 ஆம் தேதி ஹூண்டாய் நிறுவனம் சென்னை அருகில் உள்ள ஆலையில் உற்பத்தி பணிகளை துவங்கியது.

ஹூண்டாய் நிறுவனம் 1999 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அன்று முதல் இன்று வரை உலகின் சுமார் 88 நாடுகளுக்கு கிட்டத்தட்ட 30 லட்சம் வாகனங்களை ஹூண்டாய் ஏற்றுமதி செய்து இருக்கிறது.



ஜனவரி முதல் டிசம்பர் 2019 வரை ஹூண்டாய் மோட்டார் இந்தியா 1,81,200 யூனிட்களை சென்னை ஆலையில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களில் 26 சதவீதம் வாகனங்களை ஹூண்டாய் உற்பத்தி செய்திருக்கிறது.

இவற்றில் ஒவ்வொரு நாடுகளுக்கான தட்டுப்பாடு மற்றும் வரவேற்புக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட வாகனங்கள் எண்ணிக்கை 792 ஆகும். நாட்டில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் முன் ஹூண்டாய் நிறுவனம் புத்தம் புதிய கிரெட்டா மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதுவரை புதிய கிரெட்டா காரை வாங்க சுமார் 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News