ஆட்டோமொபைல்
நியூ யார்க் ஆட்டோ விழா

கொரோனா வைரஸ் காரணமாக 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து

Published On 2020-05-24 06:15 GMT   |   Update On 2020-05-23 11:52 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

   

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக நியூ யார்க் ஆட்டோ விழா அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. 

உலக நாடுகளை கொரோனா வைரஸ் வாட்டி வதைத்து கொண்டிருப்பதால், இந்த ஆண்டு நடைபெற இருந்த நியூ யார்க் ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 



ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா நடைபெறும் ஜாவிட்ஸ் சென்ட்டரில் தற்சமயம் தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தேவை அதிகரிக்கும் சூழலுக்கு ஏற்ப இந்த மருத்துவமனை செயல்படும் என தெரிகிறது. 

இந்த ஆண்டிற்கான விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஏப்ரல் 2, 2021 முதல் ஏப்ரல் 11, 2021 வரை நியூ யார்க் ஆட்டோ விழா நடைபெற இருக்கிறது. முன்னதாக ஜெனீவா ஆட்டோ விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதலில் ரத்து செய்யப்பட்டது. இதன் பின் டெட்ராயிட் மற்றும் பாரிஸ் மோட்டார் விழாக்களும் ரத்து செய்யப்பட்டன. 
Tags:    

Similar News