ஆட்டோமொபைல்
வாகன சோதனை

ஊரடங்கு விதிமீறல் - ஒன்பது கோடி ரூபாய் அபராதம் வசூலித்த போக்குவரத்து காவல்துறை

Published On 2020-05-15 11:15 GMT   |   Update On 2020-05-15 11:15 GMT
ஊரடங்கு விதிமீறியவர்களிடம் இருந்து போக்குவரத்து காவல்துறை சார்பில் சுமார் ஒன்பது கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
 


மும்பையில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ. 9 கோடி அபராதத்தை மும்பை போக்குவரத்து காவல் துறை வசூலித்துள்ளது. இதுதவிர விதிமீறியவர்களுக்கு அபராத ரசீதும் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் படி அத்தியாவசிய தேவைகள், அவசர சேவை மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வரவேண்டும்.

மார்ச் 23 ஆம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் விதிகளை மீறியவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்படி 32,248 இருசக்கர வாகனங்கள் அரசு விதிகளை மீறியதாகவும், 11,611 பேர் தேவையான ஆவணங்கள் இல்லாத குற்றத்திற்கும், 6354 பேர் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனத்தில் பயணித்ததாகவும், 73,735 பேர் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் சென்றதாக அபராதம் வசூலிக்கப்பட்டது.



மும்பை போக்குவரத்து காவல் துறை சார்பில் 2,03,188 செல்லான்கள் வழங்கப்பட்டன. போக்குவரத்து விதிகளை மீறியதாக மொத்தம் 3,37,136 பேரிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதே காலக்கட்டத்தில் விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப வழங்கும் போது அபராத தொகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் காவல் துறை சார்பில் இதுவரை 1.28 லட்சம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ. 5 கோடி வரையிலான அபராதம் வசூலிக்கப்பட்டது.
Tags:    

Similar News