ஆட்டோமொபைல்
ரோபோட் காப் எல்டி

கொரோனா பிடியில் இருந்து தமிழக காவலர்களை பாதுகாக்கும் ரோபோக்கள்

Published On 2020-05-05 11:33 GMT   |   Update On 2020-05-05 11:33 GMT
தமிழக காவல்துறை அதிகாரிகளை கொரோனா பிடியில் இருந்து பாதுகாக்கும் பணியினை நான்கு சக்கர ரோபோக்கள் செய்து வருகின்றன.



சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நுழைந்து உயிரை பணயம் வைத்து பணியாற்றுவதற்கு மாற்று வழியை காவல் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். நாட்டில் அதிக கொரோனா நோயாளிகள் உள்ள பகுதிகளில் ஒன்றாக சென்னை இருக்கிறது. 

இந்நிலையில் கொரோனா பாதித்த சிவப்பு மண்டலங்களை பாதுகாப்பு பணிகளை கவனிக்க ரோபோட் காப் எல்டி-யை பயன்படுத்த சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. இது காவல்துறை அதிகாரிகள் நேரடியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை போக்குகிறது.



இந்த ரோபோட் ரிமோட் மூலம் இயக்கக்கூடியதாகும், மேலும் இது வயர்லெஸ் முறையில் அதிகபட்சமாக ஒரு கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. முற்றிலும் பயனற்ற பொருட்களால் ஆன ரோபோட் ஒரு வார காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

மேலும் இது கண்காணிப்பு, உள்ளூர் மக்களுடன் தகவல் பரிமாற்றம் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள கேமரா மற்றும் இருவழி இன்டர்காம் உள்ளிட்டவை பொது அறிவிப்புகள் மட்டுமின்றி மக்கள் கூறும் தகவல்களை அதிகாரிகள் கேட்க செய்யும் வசதியை கொண்டுள்ளது. 

ரோபோட் காப் எல்டி-யில் எல்இடி டிஸ்ப்ளே மூலம் தகவல் ஒளிபரப்ப முடியும். இதனால் போலீசார் கொரோனா பாதித்த பகுதிக்கு செல்லாமல் வெளியில் இருந்தபடி உள்ளூர்வாசிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்யலாம்.
Tags:    

Similar News