ஆட்டோமொபைல்
நிசான் கிக்ஸ்

விரைவில் இந்தியா வரும் 2020 நிசான் கிக்ஸ்

Published On 2020-05-01 06:15 GMT   |   Update On 2020-04-30 12:36 GMT
நிசான் நிறுவனத்தின் புதிய 2020 நிசான் கிக்ஸ் எஸ்யுவி கார் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



நிசான் இந்தியா நிறுவனம் தனது 2020 கிக்ஸ் எஸ்யுவி காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய 2020 நிசான் கிக்ஸ் எஸ்யுவி சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய 2020 கிக்ஸ் எஸ்யுவி மாடலை நிசான் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளியீடு தாமதமாகி இருக்கிறது. தற்சமயம் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற இருப்பதால் நிசான் நிறுவனம் புதிய 2020 கிக்ஸ் எஸ்யுவி மாடலை விரைவில் வெளியிடலாம்.



2020 நிசான் கிக்ஸ் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அதிக செயல்திறன் வழங்கும் மாடல்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய கிக்ஸ் எஸ்யுவி மாடலில் நிசான் நிறுவனம் புதிய ஹெச்ஆர்13 டிடிடி 1.3 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்குகிறது. இது 153 பிஹெச்பி பவர், 254 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும்.

புதிய ஹெச்ஆர்13 டர்போ-சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆர்35 ஜிடி-ஆர் மாடலில் உள்ளதை போன்ற சிலிண்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக நிசன் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இது என்ஜின் செயல்திறனை மேம்படுத்தும் என கூறப்படுகிறது. 

2020 நிசான் கிக்ஸ் எஸ்யுவி மாடலில் எக்ஸ் டிரானிக் சிவிடி கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது அதிக மைலேஜ் வழங்க வழி செய்வதோடு, குறைந்த நேரத்தில் அதிவேகமாக பயணிக்க வழிசெய்யும்.
Tags:    

Similar News