ஆட்டோமொபைல்
டாடா கோஷாக்

டாடா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான்

Published On 2020-04-26 06:15 GMT   |   Update On 2020-04-25 11:42 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் செடான் மாடல் கார் இந்த பெயரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய காம்பேக்ட் செடான் மாடல் காரை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சந்தையில் புதிய காம்பேக்ட் செடான் மாடல் கோஷாக் எனும் பெயரில் உருவாகி வருவதாகவும், இது மாருதி சுசுகி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

கோஷ்வாக் எனும் பறவையின் பெயரை தழுவி கோஷாக் எனும் பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. டாடா நிறுவனம் தனது பயணிகள் வாகனங்களுக்கு பறவைகளின் பெயரை சூட்டுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. முன்னதாக ஹேரியர் மற்றும் அல்ட்ரோஸ் போன்ற மாடல்களும் இதே வழக்கத்தை தொடர்ந்து பெயரிடப்பட்டன.



புதிய டாடா கோஷாக் மாடல் 4 மீட்டர்களுக்குள் உருவாகி இருக்கும் என்றும் இது டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் இருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான டாடா அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலும் இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே பிளாட்ஃபார்ம் டாடா நிறுவனத்தின் புதிய ஹெச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யுவி மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வடிவமைப்பில் புதிய காம்பேக்ட் செடான் மாடல் ஹார்ன்பில், சியெரா இவி கான்செப்ட் மற்றும் அல்ட்ரோஸ் போன்ற மாடல்களை தழுவி உருவாக்கப்படும் என தெரிகிறது.

புதிய கார் பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. அந்த வகையில் இந்த கார் முற்றிலும் புதிய மாடலாக இருக்குமா அல்லது அடுத்த தலைமுறை டிகோர் மாடலாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
Tags:    

Similar News