ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர்

இந்திய சந்தைக்கு வர தயாராகும் பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர்

Published On 2020-04-23 11:49 GMT   |   Update On 2020-04-23 11:49 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எஃப் 900 ஆர் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா நிறுவனம் பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மற்றும் எஸ் 1000 எக்ஸ்ஆர் மோட்டார்சைக்கிள் டீசர்களை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது. அந்த வகையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு நிறைவுற்றதும் இரு மோட்டார்சைக்கிள்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். 

புதிய பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மோட்டார்சைக்கிளில் எஃப் 900 எக்ஸ்ஆர் மாடலில் உள்ள என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 895சிசி பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 105 பிஹெச்பி பவர், 92 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.



இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு 200 கிலோமீட்டருக்கும் அதிக வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அடுத்த இரு மாதங்களுக்குள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 11 லட்சம் முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிஎம்டபிள்யூ எஃப் 900 ஆர் மோட்டார்சைக்கிள் டுகாட்டி மான்ஸ்டர் 821 மற்றும் கவாசகி இசட்900 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News