ஆட்டோமொபைல்
ரெனால்ட் டிரைபர்

இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் விலை மாற்றம்

Published On 2020-04-22 11:59 GMT   |   Update On 2020-04-22 11:59 GMT
இந்தியாவில் ரெனால்ட் டிரைபர் பிஎஸ்6 மாடலின் விலை மீண்டும் மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது டிரைபர் எம்பிவி மாடல் காரின் விலையை இந்தியாவில் மீண்டும் உயர்த்தி இருக்கிறது. தற்சமயம் ரெனால்ட் டிரைபர் மாடல் விலை ரூ. 4 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வு பேஸ் மாடல் தவிர மற்ற வேரியண்ட்களில் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ரெனால்ட் டிரைபர் பேஸ் மாடல் விலை மாற்றமின்றி தற்சமயம் ரூ. 4.99 லட்சத்தில் கிடைக்கிறது. மட்-ரேஞ்ச் மற்றும் டாப் எண்ட் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ரெனால்ட் டிரைபர் பிஎஸ்6 மாடல்களின் விலை ரூ. 15 ஆயிரம் வரை அனைத்து வேரியண்ட்களுக்கும் உயர்த்தப்பட்டது.



ரெனால்ட் டிரைபர் கார் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் ரெனால்ட் க்ளியோ மற்றும் சான்ட்ரியோ போன்ற மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 71 பி.ஹெச்.பி. பவர், 96 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஈசி ஆர் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ரெனால்ட் டிரைபர் கார் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் டூயல்-டோன் இன்டீரியர் செய்யப்பட்டுள்ளது. டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் மற்றும் டோர் பேனல்களில் சில்வர் ட்ரிம் செய்யப்பட்டிருப்பது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.
Tags:    

Similar News