ஆட்டோமொபைல்
டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்

டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிப்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியீடு

Published On 2020-04-09 11:44 GMT   |   Update On 2020-04-09 11:44 GMT
டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஃபார்ச்சூனர் மாடல் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
 


டொயோட்டா நிறுவனத்தின் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் முதற்கட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. ஸ்பை படங்களில் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் விவரங்கள் தெரியவந்துள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஸ்பை படங்களின் படி புதிய ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மேம்பட்ட முன்புற பம்ப்பர், மெல்லிய ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய பிளாக்டு-அவுட் செய்யப்பட்ட கிரில், சென்ட்ரல் ஏர் இன்டேக், பிளாக்டு அவுட் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



காரின் பின்புறம் பற்றி அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், ட்வீக் செய்யப்பட்ட எல்இடி டெயில்லைட்கள், பூட்லிட், புதிய பம்ப்பர் வடிவமைப்பு, ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்புறத்திலும் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம்.

சர்வதேச சந்தையில் ஃபார்ச்சூனர் மாடலில் 2 ரெட்ரோல் என்ஜின் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலில் 2.8 லிட்டர் பிஎஸ்6 டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 174.5 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News