ஆட்டோமொபைல்
ஹோண்டா

மார்ச் மாத விற்பனையில் அசத்திய ஹோண்டா நிறுவனம்

Published On 2020-04-05 06:15 GMT   |   Update On 2020-04-04 11:56 GMT
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மார்ச் மாத விற்பனையில் ஹோண்டா டூ வீலர்ஸ் நிறுவனம் அசத்தி இருக்கிறது.



ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் மார்ச் மாதத்தில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக பிப்ரவரியில் ஹோண்டா நிறுவனம் 2,49,136 யூனிட்களை விற்பனை செய்து இருந்த நிலையில், மார்ச் மாதம் மொத்தம் 2,61,669 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

ஹோண்டா 2 வீலர்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் 11 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மார்ச் 2019 இல் ஹோண்டா நிறுவனம் 2,22,325 யூனிட்களை விற்பனை செய்து இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்நிறுவனம் சுமார்  2,45,669 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி 16,000 யூனிட்களாக இருந்தது.



ஹோண்டா நிறுவன ஆலையில் பணிகள் மார்ச் 22 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. எனினும், சிக்கலான காலக்கட்டத்தில் தனது வியாபார ஒப்பந்ததாரர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்பை வழங்குவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இதுதவிர மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரையிலான காலக்கட்டத்தில் நிறைவடைந்த வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஹோண்டா அறிவித்தது. மேலும் ஹோண்டா இந்தியா பவுன்டேஷன் சார்பில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள ரூ. 11 கோடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.

இத்துடன் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் அதிக காற்றழுத்தம் கொண்ட 2000 பேக்பேக் ஸ்பிரேயர்களை வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது.
Tags:    

Similar News