ஆட்டோமொபைல்
பி.எம்.டபிள்யூ. எக்ஸ்3 எம்

இணையத்தில் லீக் ஆன பி.எம்.டபிள்யூ. எக்ஸ்3 எம் கார் ஸ்பை படம்

Published On 2020-03-29 06:15 GMT   |   Update On 2020-03-28 11:56 GMT
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்3 எம் வேரியண்ட் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.



பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் எக்ஸ்3 எம் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்த காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஸ்பை படங்களில் புதிய கார் எல்.இ.டி.டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. 

புதிய பி.எம்.டபிள்யூ. காரில் 3.0 லிட்டர் சிக்ஸ் எம் ட்வின்பவர் டர்போ என்ஜின் வழங்கப்படுகிறது. இது 473 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் காம்படீஷன் வேரியண்ட்டில் இதே என்ஜின் 503 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.

இந்த காரில் எம் ஸ்பெக் எக்ஸ்டிரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் அனைத்து வீல்களுக்கும் என்ஜின் செயல்திறன் கிடைக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு எம் ஸ்டெப்டிரானிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்3 எம் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.



இதன் காம்படீஷன் எடிஷன் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தினை 4.1 நொடிகளில் எட்டிவிடும்.  பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் மற்ற சீரிஸ்களை போன்றே புதிய எக்ஸ்3 எம் மாடலிலும் உறுதியான பொருட்களான பாகங்கள் மற்றும் தலைசிறந்த சேசிஸ் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

பி.எம்.டபிள்யூ.வின் புதிய எஸ்.யு.வி.யின் டேம்ப்பர்களை எலெக்ட்ரிக் முறையில் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய எக்ஸ்3 எம் சீரிஸ் மாடலில் பிரத்யேக ஸ்டீரிங் வீல், தலைசிறந்த காம்பவுண்ட் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் எம் எக்ஸ்டிரைவ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இவை அனுபவம் மிக்க ஓட்டுனர்களை எக்ஸ்3 எம் மாடலை கண்ட்ரோல்டு ட்ரிஃப்ட் செய்ய அனுமதிக்கிறது. சர்வதேச சந்தையில் பி.எம்.டபிள்யூ. எக்ஸ்3 எம் மாடல் விலை 70,800 யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 58.26 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 70 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News