ஆட்டோமொபைல்
நியூ யார்க் ஆட்டோ விழா

கொரோனா அச்சம் காரணமாக 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ஒத்திவைப்பு

Published On 2020-03-11 09:54 GMT   |   Update On 2020-03-11 09:54 GMT
2020 நியூ யார்க் ஆட்டோ விழா கொரோனா பாதிப்பு அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மற்ற துறைகளை போன்று ஆட்டோமொபைல் துறையிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ஜெனிவா ஆட்டோ விழா கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ஏப்ரல் 10-ம் தேதி துவங்கி ஏப்ரல் 19 வரை நடைபெற இருந்தது. 



இந்நிலையில், 2020 நியூ யார்க் ஆட்டோ விழா ஆகஸ்ட் 28-ம் தேதி துவங்கி செப்டம்பர் 6 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழா மூலம் உள்ளூர் மற்றும் மாநில அளவில் சுமார் ரூபாய் 2400 கோடி வரையிலான வர்த்தக பலன் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2020 நியூ யார்க் ஆட்டோ விழாவிற்கான புதிய தேதிகள் அனைத்து தரப்பினருக்கும் உகந்ததாக இருக்கும் என நம்புவதாக கிரேட்டர் நியூ யார்க் ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு தலைவர் மார்க் ஸ்கெயின்பெர்க் தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக மோட்டோ ஜி.பி. கத்தார் சுற்று, மற்றும் எஃப்1 பந்தயத்தின் சீன சுற்று உள்ளிட்டவை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News