ஆட்டோமொபைல்
டேட்சன் ரெடிகோ

டேட்சன் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்

Published On 2020-03-10 11:40 GMT   |   Update On 2020-03-10 11:40 GMT
டேட்சன் நிறுவனத்தின் ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.



டேட்சன் நிறுவனம் விரைவில் தனது ரெடிகோ என்ட்ரி லெவல் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

அந்த வகையில் இந்த கார் புதிய கிராஷ் சோதனைகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் என்ஜின்கள் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போதைய ரெடிகோ மாடல் 800 சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் 800 சிசி பெட்ரோல் என்ஜின் 545 பி.ஹெச்.பி. பவர், 72 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.0 லிட்டர் யூனிட் 68 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.



இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 1.0 லிட்டர் மாடலில் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. புதிய மேம்பட்ட என்ஜின்களும் பி.எஸ். 6 ரகத்தில் இதே செயல்திறனை வெளிப்படுத்தும் என கூறப்படுகிறது.

ரெடிகோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்புறங்களிலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ரெடிகோ மாடல் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரிகிறது.
Tags:    

Similar News