ஆட்டோமொபைல்
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

பாதுகாப்பிற்கு உயரிய விருது பெற்ற முதல் இந்திய கார்

Published On 2020-02-21 11:04 GMT   |   Update On 2020-02-21 11:04 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 சர்வதேச அளவில் பாதுகாப்பிற்கு உயரிய விருதை வென்று இருக்கிறது.



மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 கார் சர்வதேச சந்தையில் பாதுகாப்பு விருப்பத்திற்கான பிரிவில் குளோபல் NCAP விருது வென்று இருக்கிறது. இந்த விருதினை பெறும் முதல் இந்திய கார் என்ற பெருமையை மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 அடைந்திருக்கிறது. பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பில் இந்த கார் முறையே ஐந்து மற்றும் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்றுள்ளது.

எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் அம்சம் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டான்டர்டு அம்சமாக இருக்க வேண்டும். ஒருவேளை இந்த அம்சம் ஆப்ஷனலாக வழங்கப்பட்டு இருந்தால், அனைத்து வேரியண்ட்களிலும் தனியே ஆட்-ஆன் போன்று வழங்க வேண்டும். மேலும் இதனை ஒட்டுமொத்த விற்பனையில் 20 சதவீதம் யூனிட்கள் விற்பனை செய்ய வேண்டும்.



தகுதியுள்ள கார்கள் பாதசாரிகள் பாதுகாப்பு தரத்தினை உறுதி செய்யும் ஐக்கிய நாடுகள் விதிமுறைகள் யு.என்.127 அல்லது ஜி.டி.ஆர்.9 உள்ளிட்ட சோதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து மற்ற பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகிறது. 

டாப் எண்ட் டபுள்யூ8 (ஒ) மாடலில் ஏழு ஏர்பேக்குகள், ஏ.பி.எஸ்., கார்னெர் பிரேக்கிங் கண்ட்ரோல், ஐசோஃபிக்ஸ் சைல்டு ஆன்க்கர்கள், இ.எஸ்.சி., காரில் அமரும் அனைவருக்கும் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள், முன்புறம் பார்க்கிங் சென்சார்கள், இரண்டாம் அடுக்கு இருக்கையில் அமர்வோருக்கு சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 கார் பாதுகாப்பு விருப்பத்திற்கான விருதை வென்று இருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News