ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிரெட்டா

மார்ச் மாதம் வெளியாகும் புதிய ஹூண்டாய் கார்

Published On 2020-02-19 10:42 GMT   |   Update On 2020-02-19 10:42 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கார் மாடல் மார்ச் மாத வாக்கில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.



ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை கிரெட்டா காரினை மார்ச் 17-ம் தேதி வெளியிட இருக்கிறது. முன்னதாக இந்த கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுக நிகழ்வில் புதிய கார் வெளிப்புற தோற்றம் பற்றிய விவரங்கள் வெளியானது.

2020 ஹூண்டாய் கிரெட்டா மாடலில் காஸ்மெடிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஹூண்டாய் ஐ.எக்ஸ்.25 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. சீனாவில் கிரெட்டா மாடல் கார் ஹூண்டாய் ஐ.எஸ்.25 பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.



புதிய 2020 ஹூண்டாய் கிரெட்டா மாடலில் பெரிய கிரில், மெல்லிய இன்டிகேட்டர் லேம்ப்கள், புதிய மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், இருபுறங்களிலும் ஸ்கிட் பிளேட்கள், மேம்பட்ட டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. 

என்ஜினை பொருத்தவரை புதிய காரில் கியா செல்டோஸ் மாடலில் உள்ளதை போன்ற செயல்திறனை எதிர்பார்க்கலாம். அந்த வகையில் புதிய காரில் பி.எஸ்.6 ரக 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் வழங்கப்படலாம். இத்துடன் 140 பி.ஹெச்.பி. வழங்கும் 1.4 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 7 ஸ்பீடு டிசிடி டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.

மூன்று வெவ்வேறு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இதன் டீசல் வேரியண்ட் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News