ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கிரெட்டா

பிரத்யேக இன்டீரியர் கொண்டு உருவாகும் ஹூண்டாய் கிரெட்டா

Published On 2020-02-17 10:34 GMT   |   Update On 2020-02-17 10:34 GMT
ஹூண்டாய் நிறுவனத்தின் 2020 கிரெட்டா கார் புத்தம் புதிய உள்புற வடிவமைப்பு கொண்டு உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



ஹூண்டாய் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை கிரெட்டா மாடலினை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. புதிய கிரெட்டா கார் ஏற்கனவே சீனாவில் விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. சீனாவில் இந்த கார் ix25 எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவில் விற்பனையாகும் மாடலுக்கும் இந்திய மாடலுக்கும் உள்புறத்தில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் முற்றிலும் வித்தியாசமான டேஷ்போர்டு வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கிரெட்டா காரில் உள்ள ஸ்டீரிங் வீல் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் புதிய தலைமுறை ஹூண்டாய் சொனாட்டா போன்று காட்சியளிக்கிறது.



புதிய ஹூண்டாய் சொனாட்டா ஸ்டீரிங் வீலில் ஆடியோ கண்ட்ரோல், ப்ளூடூத் டெலிபோனி மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்திய மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மட்டும் சீன மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.

இதன் டேஷ்போர்டு மற்றும் ஏ.சி. வென்ட் வடிவமைப்பு பிரத்யேகமாக காட்சியளிக்கிறது. பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் ஏ.சி. வென்ட்களின் கீழ் பொருத்தப்பட்டுள்ளது. இது செல்டோஸ் மாடலில் உள்ளதை போன்று 10.25 இன்ச் யூனிட் வழங்கப்படலாம். இந்தியாவில் இந்த ஸ்கிரீன் கிடைமட்டமாக பொருத்தப்படும் என கூறப்படுகிறது.

புதிய கிரெட்டா இந்திய விலை மார்ச் 17-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. புதிய கிரெட்டா கார் கியா செல்டோஸ், நிசான் கிக்ஸ், ரெனால்ட் கேப்டூர் மற்றும் எம்.ஜி. ஹெக்டார் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
Tags:    

Similar News